ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தார்
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்தவர் அலாவுதீன் மனைவி அஸ்மாபானு -37, இவரது மகள் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வந்துள்ளார். அந்த பள்ளியில் ரூ.50 ஆயிரம் கட்டினால் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கலாம் என்றும், படித்து முடித்த பின்னர் கட்டிய தொகை ரூ 50 ஆயிரம் திரும்ப தரப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியிருந்தாக அஸ்மாபானு தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகள் அப்பள்ளியில் படிப்பு தொடர விரும்பாததால், வேறு பள்ளியில் சேர்க்க தான் கட்டிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார் அதற்கு பணத்தை தர மறுத்த பள்ளி நிர்வாகம், தன்னை மிரட்டியதாக அஸ்மாபானு தெரிவித்து, இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி டிசம்பர் 11ம் தேதி அஸ்மாபானு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த போது தீடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கற்பகம், அரசு வாகனத்தில் அஸ்மாபானுவை சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பெற்ற பிறகு நலமாக உள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.