விஜயகாந்த் உருவப்படத்திற்கு முன்பு கதறி அழுது அஞ்சலி செலுத்திய பெண்

விஜயகாந்த் உருவப்படத்திற்கு முன்பு கதறி அழுது அஞ்சலி செலுத்திய பெண்
கண்ணீர் அஞ்சலி செலுத்திய பெண் 
கே.கே நகர் அருகே விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு பெண் ஒருவர் கதறி அழுது அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

தமிழக மக்களால் கேப்டன் என்று அழைக்கபட்ட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்த செய்தி வெளியானதில் இருந்து அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் திருச்சி கே கே நகர் அருகே மறைந்த விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அந்த வழியாக வந்த புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் அரசியலையும் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட மாமனிதர் என கூறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

Tags

Next Story