அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை

அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை

அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரண்னை மேற்கொண்டு வருகின்றனர்
வடவள்ளி முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா.இவர் அதே பகுதியில் உள்ள மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான இடத்தில் மீன் கடை நடத்த அட்வான்ஸ் தொகை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.வியாபாரம் மந்தமாக நடைபெற்ற காரணத்தால் தொடர்ந்து ஷீபாவால் கடையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரிடம் கடையை காலி செய்வதாகவும் தான் வழங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.கடை உரிமையாளர் மாரிமுத்துவோ அட்வான்ஸ் தொகை போக மேலும் ஷீபா 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று பணத்தை கேட்டு வந்த ஷீபாவை மாரிமுத்து அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரிடம் இருந்து செல்போனையும் பறித்து உள்ளனர்.இது குறித்து அவர் புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story