மரக்கடை உரிமையாளருக்கு கத்திக் குத்து. 2 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாலவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் (40). இவர் அந்தப் பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் அலெக்சாண்டர் (38) என்பவருக்கும் இடையே தொழில் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜார்ஜ் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சந்தனபுரம் என்ற பகுதியில் வரும்போது அலெக்சாண்டர் மற்றும் அவருடைய கூட்டாளி ராஜு ஆகியோர் சேர்ந்து ஜார்ஜை தடுத்து நிறுத்தி, தகராறு செய்து தாக்கியதுடன், கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். அவர் சத்தம் போட்டதும் இருவரும் தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த ஜார்ஜ் - ஐ அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் அலெக்சாண்டர் மற்றும் ராஜு ஆகியோர் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
