மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி
சின்னங்கள் பொருத்தும் பணி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தேர்தல் பணிகள் நடைபெறுவதை நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- சட்டமன்ற தொகுதி வாரியாக வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சுயயேட்சை வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளை விரைந்து முடித்திட தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையின் அருகில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு ஒளிப்படக்கருவியினை (கேமரா) பார்வையிட்டார்கள். நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், கூடுதல் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாந்தி, கல்குளம் வட்டாட்சியர்முருகன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story