கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்

கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்

புதிய மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது 

கோரிப்பாளையம் மேலமடை பகுதியில் மேம்பாலம் பணிகள்-போக்குவரத்து மாற்றம் குறித்து ஆலோசனை

மதுரை கோரிப்பாளையம், மேலமடையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது.

கோரிப்பாளையத்தில் ரூ.190.4 கோடியிலும், மேலமடையில் ரூ.150.28 கோடியிலும் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இப்பணியை கடந்த அக்.,30ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கோரிப்பாளையத்தில் 61 துாண்களுடன் 2 கி.மீ.,க்கு பாலம் அமைகிறது. தமுக்கம் முதல் வைகை குறுக்கே ஏ.வி.பாலத்திற்கு இணையாக அமைக்கப்பட்டு நெல்பேட்டை ரவுண்டானாவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணியின்போது தமுக்கம் - கோரிப்பாளையம் இடையே ஒருபகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படும். வாகனங்கள் காந்தி மியூசியம், கலெக்டர் அலுவலகம், பனகல் ரோடு வழியாக திருப்பிவிடப்படும். ஏ.வி.பாலம், யானைக்கல் பாலத்தில் வழக்கம் போல் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

கோரிப்பாளையம் பகுதியில் போதுமான மாற்று வழிகள் உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அதிகம் இருக்காது.அதேசமயம் மேலமடை சந்திப்பில் பால கட்டுமானம் பணியின்போது கோமதிபுரம் ரோடு ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். சுந்தரம் பார்க் பகுதியில் இருந்து வாகனங்கள், இணைப்பு ரோடுகள் வழியாக கே.கே.நகருக்கு திருப்பி விடப்படும்.பாலப்பணி 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம், சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியின்போது பக்தர்கள் கூட்டத்தை எப்படி சமாளிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அடுத்தவாரம் ஆலோசிக்க உள்ளனர்.

Tags

Next Story