மடப்புரம் கோவிலில் உண்டியல் எண்ணும் பணிகள் தீவிரம்

மடப்புரம் கோவிலில் உண்டியல் எண்ணும் பணிகள் தீவிரம்

உண்டியல் எண்ணும் பணி

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரத்தில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் இப்பகுதி மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகள் இருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணிகள் உதவி ஆணையர் செயல் அலுவலர் ஞானசேகரன் தலைமையிலும், மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் தக்கார் சங்கர், சிவகங்கை அறநிலை துறை அதிகாரி ஆகியோர் முன்னிலையில் 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் 32 லட்சத்து 69 ஆயிரத்து 315 ரூபாயும், 223 கிராம் தங்கமும், 283 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் 75 ஆயிரத்து 560 ரூபாயும் காணிக்கையாக கிடைத்துள்ளன.

Tags

Read MoreRead Less
Next Story