அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடும் பணி துவக்கம்
சிலைகளை மூடும் பணி
திருக்கோவிலூர் வெவ்வேறு இடங்களில் இருக்கும் தலைவர்களின் சிலைகளை துணியால் மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் மாலையில் இருந்து அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து நேற்று திருக்கோவிலூர் பேருந்து நிலையம், ஐந்து முனை சந்திப்பு, நான்கு முனை சந்திப்பு , சந்தைப்பேட்டை உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் இருந்த அரசின் திட்டங்கள் தொடர்பான விளம்பர பதாகைகள், முதல்வர், அமைச்சர்களின் விளம்பர பேனர்களையும், கட்சி விளம்பர பேனர்கள், அரசியல் கொடிக்கம்பங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.அவற்றின் தொடர்ச்சியாக, நகராட்சியில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் தலைவர்களின் சிலைகளை துணியால் மூடும் பணியில் நகராட்சி ஆணையாளர் கீதா முன்னிலையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Next Story