குமரியில் விவி பேட் இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது
சின்னம் பொருத்தும் பணி
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இரண்டு மின்னணு இயந்திரங்களும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு மின்னணு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.
தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக, தொடர்ந்து வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதது. தற்பொழுது அந்தந்த தாலுகா அலுவலகங்களை மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்க வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்துவதற்காக அச்சிடப்பட்ட தாள்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பாதுகாக்க வைக்கப்பட்டுள்ளது. பெல் இன்ஜினியர்கள் முன்னிலையில் வேட்பாளர்கள் பெயர் சின்னங்கள் அடங்கிய தாள் பொருத்தப்பட உள்ளது. சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று மாலை தொடங்கியது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், திருவட்டாறு, கிள்ளியூர் ஆகிய தாலுகா அலுவலர்களிலும் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் இந்த பணிகள் தொடங்கியது.