மழையால் மண் ஓடுகள் செய்யும் பணிகள் பாதிப்பு

மழையால் மண் ஓடுகள் செய்யும் பணிகள் பாதிப்பு

மழையால் மண் ஓடுகள் செய்யும் பணிகள் பாதிப்பு

பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானைகள் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்டம் செய்பவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

போகி பண்டிகைக்கு தேவையற்ற பொருட்களை வீட்டு தெரு வாசலில் குவித்து அதிகாலையில் தீயிட்டு எரிப்பர். போகி பண்டிகைகக்கு சில வாரங்களே உள்ள நிலையில், போகி மேளம் தயாரிக்க முக்கிய மூலப்பொருட்களின் ஒன்றான, மண் தள ஓடு தயாரிக்கும் பணியில், காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மழையால் நடப்பு ஆண்டு மண்தள ஓடு உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, திருக்காலிமேட்டைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் பி.சிவலிங்க உடையார் கூறியதாவது: போகி மேளத்திற்கான, மண்தள ஓடு தயாரிக்கும் பணியை கடந்த வாரம் துவக்கினோம்.

ஒரு நாளைக்கு 300 - 400 ஓடுகள் தயார் செய்வோம். தயாரித்த ஓடுகளை வெயிலில் நன்றாக உலர வைத்து, பின் சூளையில் தீயிட வேண்டும். ஆனால், தீபாவளி பண்டிகையில் இருந்தே காஞ்சிபுரத்தில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அடிக்கடி மேகமூட்டம் உருவாகிறது. தொடர்ந்து வெயில் இல்லாததால், நடப்பு ஆண்டு போகி மேள மண்தள ஓடு தயாரிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. நன்றாக வெயில் இருந்தால்தான், பொங்கல் பண்டிகைக்கான மண் பானை உற்பத்தியை துவக்க முடியும். மழையால் இரு மாதங்களாக வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்."

Tags

Next Story