கந்தசாமி கோவிலில் வருடம் தீட்டும் பணி மும்முரம்

கந்தசாமி கோவிலில் வருடம் தீட்டும் பணி மும்முரம்

கந்தசாமி கோவில்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைபூசவிழா மற்றும் சித்திரையில் நடக்கவிருக்கும் கும்பாபிசேகவிழாவையொட்டி, வர்ணம் தீட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது.
சேலம்– நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி முருகன் கோவில் சுமார், 300ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் வருடம்தோறும் தைபூச தேர்திருவிழா கோலாகலமாக நடக்கும். கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். எனவே இக்கோவிலில், வருகிற சித்திரை மாதம் கும்பாபிசேகம் நடத்த முடிவுசெய்து, கடந்த டிச.15ல் சுவாமிகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. தற்சமயம், தைபூச தேரோட்டவிழா மற்றும் அதனைதொடர்ந்து, சித்திரையில் கும்பாபிசேகவிழா நடக்க இருப்பதால், பரம்பரை அறங்காவலர் பூஜாரி சந்திரலேகா மற்றும் செயல்அலுவலர் மணிகண்டன் தலைமையில், கோவில் கோபுரம் மற்றும் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும்பணி மும்முரமாக நடந்து வருகின்றது.

Tags

Next Story