கோவிலுக்கு மஞ்சள் காப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரம் !

கோவிலுக்கு மஞ்சள் காப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரம் !

காப்பு தயாரிக்கும் பணி

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு மஞ்சள் காப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழாவையொட்டி, பக்தர்கள் மஞ்சள் காப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இக்கோயிலில் இந்த ஆண்டு 68 வது மாசி பங்குனி திருவிழா மார்ச் 12ம் தேதி கணபதி பூஜை, கொடியேற்றம் மற்றும், காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச் 19ம் தேதி கோயில் கரகம்,மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 20ம் தேதி காலை முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. மாலையில் கரகம் பருப்பூரணியில் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நடைபெறுகிறது. மார்ச் 21 இரவு அம்மன் திருவீதி உலாவும் 22ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்வதற்காக, கோயிலில் காப்பு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story