சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் தாக்கியதில் ஏற்பட்ட பெருமழை காரணமாக ஏராளமான பகுதிகள் மழை நீரில் மூழ்கி தண்ணீர் வெளியேறாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதைத் தொடர்ந்து சென்னை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி நிவாரண பொருட்கள் வழங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிவாரண பொருட்களான சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 15,000 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் 1380 கிலோ அரிசி, 40 கிலோ பருப்பு மற்றும் போர்வை ப்ரெட் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில் சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து இந்த நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story