இரும்பு அடுப்பு மீது தவறி விழுந்த தொழிலாளி பலி
கோப்பு படம்
சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள சின்ன கொல்லப்பட்டியை பெரியார் நகர் சேர்ந்த நிரேஷ்குமார் (வயது 33) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டர். இதில் கோபித்துக் கொண்டு கோகிலா அருகில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற நிரேஷ்குமார் நிலை தடுமாறி இரும்பு அடுப்பு மீது விழுந்தார்.
இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த ஒரு தாய் பாப்பாத்தி கொடுத்த புகார் என்பதில் கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.