ஏரி கரையோரம் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி!

ஏரி கரையோரம் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி!

ஏரி கரையோரம் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி

கெங்கவல்லியில் ஏரி கரையோரம் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி - போலீசார் விசாரணை
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த தன்ராஜ் மகன் சுரேஷ் (35), கூலி தொழிலாளி. இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வெளியே சென்ற சுரேஷ், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது மனைவி மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இந்நிலையில், நேற்று மாலை வலசக்கல் பட்டி ஏரி கரையோரம், சுரேஷ் மூக்கில் ரத்தம் உள்ள நிலையில் கிடந்துள்ளார். இதை அந்த பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து, அவர் போதையில் படுத்து கிடப்பதாக நினைத்து சென்று விட்டனர். இதனிடையே, கெங்கவல்லியில் காணாமல் போன வாலிபரை தேடி வருவதாக, அங்கு ஆடு மேய்த்தவர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், ஏரி கரையில் கிடந்தவர் குறித்து இரவு 10.30 மணிக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில்,சுரேஷ்.ஆர்த்தி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சுரேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸ் எஸ்ஐ நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் தாக்கியதில் இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story