ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் -ரயிலை நிறுத்திய பைலட்

சாத்தூரில் கடிதம் எழுதி வைத்து விட்டு ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்னை ரயில்வே பைலட் ரயிலை நிறுத்தி சாதுரியமாக காப்பாற்றினார்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள பொட்டல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி (எ) பிரியா (21) இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு அகடாமியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்த பாண்டியராஜ் என்ற இளைஞரும் வீரலட்சுமியும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் காதலை ஏற்க பாண்டியராஜ் வீட்டில் மறுத்த நிலையில் காதலன் பாண்டியராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 25ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் வீரலட்சுமி திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வீரலட்சுமிக்கும் அவருடைய காதலனுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சாத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தின் குறுக்கே படுத்து வீரலட்சுமி தற்கொலைக்கு முயன்று உள்ளார். இந்த நிலையில் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் பைலட் தண்டவாளத்தின் குறுக்கே ஒருவர் இருப்பதை பார்த்து சாதுரியமாக ரயிலை நிறுத்திய பைலட் ரயிலில் இருந்து இறங்கி சென்று பார்த்த போது 21 வயது இளம் பெண் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்ததது. இதை அடுத்து ரயில்வே பைலட் அந்த பெண்ணை காவல்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் தற்கொலைக்கு முயன்ற வீரலட்சுமியிடம் போலீசார் நடத்தி விசாரனை நடத்தினர். வீரலட்சுமியின் கை பையை போலீசார் சோதனை செய்த போது அதில் காதலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீரலட்சுமி எழுதிய கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் என்னுடைய காதலனை பிரிந்து தன்னால் வாழ முடிய வில்லை எனவும் என் தற்கொலைக்கு பின்னர் என்னுடைய காதலனுக்கு எந்த வித பிரச்சனையும் வரக்கூடாது என வீரலட்சுமி எழுதி இருந்தார். மேலும் நான் இறந்த பிறகு என்னை பார்க்க வருவியா என தன்னுடைய காதலனுக்கு மிக உருக்கமான கடிதத்தையும் தற்கொலைக்கு முயன்ற வீரலட்சுமி எழுதி வைத்து உள்ளார். இளம் பெண் ரயிலில் விழுந்து தற்கொலைக்கு இன்று சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story