டூவீலரிலிருந்து தவறி விழுந்த இளம் பெண் பலி

டூவீலரிலிருந்து தவறி விழுந்த இளம் பெண் பலி

 துர்கா

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சின்னராசு. இவரது மனைவி துர்கா (22).இவர்கள் இருவரும் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி பகுதியில் நடைபெற்ற திருவிழாவை காண உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் நோக்கி திரும்பி உள்ளனர். அப்போது குடியாத்தம் அருகே கொட்டாரமடுகு பகுதியில் வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து துர்கா தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். மேலும் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் விபத்து குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story