ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி இளைஞர்கள் சாலைமறியல்

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி இளைஞர்கள் சாலைமறியல்
இளைஞர்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடமலைபுத்தூரில் உள்ள சர்வே எண : 109 /1 மேயக்கால் புறம்போக்கு 10 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். அந்த இடத்தை மீட்டு கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் மற்றும் கிராம இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் எனக் கூறி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அந்த தீர்மானத்தை மீறி கடமலைபுத்தூர் கிராமத்தை சேர்ந்த தனிநபர் தொடர்ந்து மேகால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாததால் கடமலைபுத்தூர் கிராம இளைஞர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தில் கண்களை கட்டிக்கொண்டு இடத்தை மீட்டு தர வேண்டும் என போராட்டம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து,கடமலைப்புத்தூர் - ஒரத்தி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கு மேலாக கண்களைக் கட்டிக் கொண்டு கடமலை புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மேகால் புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் ,ஆக்கிரமித்துள்ள தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இதனால் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அச்சரப்பாக்கம் போலீசார் மறியலில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags

Next Story