செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்ம அடி
வேடசந்தூரில் பேருந்தில் பயணம் செய்த பூக்கடைக்காரரின் செல்போனை பறித்துச் சென்ற வாலிபரை துரத்திப்பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஒரு வேலையாக திண்டுக்கல் சென்று விட்டு மீண்டும் வேடசந்தூருக்கு ஒரு தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.வேடசந்தூர் நிலையத்திற்குள் பேருந்து நுழைந்த போது, பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் ராதாகிருஷ்ணன் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு அனைவரையும் இடித்து தள்ளி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டி பிடிக்க முயன்ற போது செல்போனை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார்.ஆனாலும் அந்த பகுதி இளைஞர்கள் அவரை துரத்தி சென்று, பொதுமக்கள் சுற்றி வளைத்து, தர்ம அடி கொடுத்து வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
Next Story