தார்சாலையை கையால் பெயர்த்த வாலிபர் - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

தார்சாலையை கையால் பெயர்த்த  வாலிபர் - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

தார்சாலையை கையால் பெயர்த்த வாலிபர் 

திருப்பத்தூர் மாவட்டம் , பொம்மி குப்பம் ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்ட தார் சாலையை வாலிபர் வெறும் கைகளால் பெயர்த்து எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் , பொம்மி குப்பம் ஊராட்சி பகுதியில் மாதா கோயில் பகுதியில் இருந்து புதிய அத்திக்குப்பம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தார் சாலை போட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த தார் சாலை தரமற்று இருப்பதாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் அந்த பகுதி மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது ஆத்திரமடைந்த அந்த பகுதி வாலிபர் ஒருவர் சாலையை வெறும் கைகளால் பெயர்த்து எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story