மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் .....

மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் .....

கார்

அருமனை அருகே மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபரை பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு சொகுசு கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகளும், ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்களும் அலறி அடித்து ஓடினர். அருமனை போலீஸ் ஸ்டேஷன் அருகே கார் வந்த போது, ரோட்டோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 பைக்குகள் மீது மோதியது.

தொடர்ந்து அவ்வழியாக வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. பைக்கில இருந்து அந்த வாலிபர் கீழே குதித்ததால், வாலிபர் லேசான காயங்களுடன் தப்பினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது.

இதில் அந்த காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது.இதை கண்டதும் அப்பகுதியில் திரண்ட மக்கள் சொகுசு காரில் இருந்த டிரைவரை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக் கள் அந்த வாலிபரை அருமனை போலீசில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story