மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபர் கைது!

மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபர் கைது!

திருப்பூரில் லிப்டு கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற வாலிபரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.


திருப்பூரில் லிப்டு கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற வாலிபரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் லிப்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி மெக்கானிக்கிடம் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபர் கைது! கோவையைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் ளவயது 24) இவர் மடிக்கணினி மெக்கானிக் நேற்று முன்தினம் திருப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலை சம்பந்தமாக வந்துள்ளார்.பின்னர் இரவு காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்ற வாலிபர் ஒருவர் ராம் பிரசாத்திடம் லிப்ட் கேட்டுள்ளார். ராம்பிரசாத் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்றார். இருள் சூழ்ந்த பகுதி வந்ததும் பின்னால் இருந்த வாலிபர் திடீரென்று கத்தியை எடுத்து ராம் பிரசாத்தின் வயிற்றில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து விட்டு தப்பினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் பிரசாத் உடனடியாக திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை வழிபறி செய்து தொடர்பாக திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த சூர்யா (25) என்பவரை போலீசார் நேற்று பிடித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரிடம் மோட்டார் சைக்கிளை வாலிபர் பறித்து சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது......

Tags

Next Story