முன்பதிவு செய்யபட்ட பெட்டியில் தம்பதியிடம் வாக்குவாதம்
தம்பதி
கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மனைவி ரமாபிரபா இருவரும் சென்னையில் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு கேரள மாநிலம் செல்லும் 22639 எண் கொண்ட அலெப்பி விரைவு ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் ஆறு இளைஞர்கள் முன்பதிவு ரயில் பெட்டியில் ஏறி கழிவறை அருகே நின்றுக்கொண்டு புகைப்பிடித்து கொண்டும் அதிக ஒலியில் சினிமா பாடல்கள் பாடியவாறு ஆட்டம் ஆடி கொண்டு வந்துள்ளனர்.இதனால், அந்த பெட்டியில் உறங்கி கொண்டிருந்த ரயில் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் ரமாபிரபா அந்த இளைஞர்களிடம் கைக்குழந்தைகள் பெரியவர்கள் எல்லாம் இருப்பதால் அமைதியாக வருமாறு கூறியுள்ளார்.
அதற்கு செவி சாய்க்காத அந்த இளைஞர்கள் ரமாவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் மணிகண்டனைய தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரமா ரயில் பயணித்து கொண்டிருந்த தனது தம்பியை அழைத்துள்ளார்.அப்போது அந்த இளைஞர்கள் அவரது தம்பியையும் தாக்கி தகராறு செய்தவர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி சென்றுள்ளனர். இளைஞர்களின் செயலின் காட்சிகள் தற்பொழுது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த ரமாபிரபா ரயிலில் நடந்த சம்பவம் குறித்து விவரித்தார்.இளைஞர்கள் தகராறில் ஈடுபடும் போது அருகில் இருந்த ஓரிருவர் மட்டுமே உதவிக்கு வந்ததாகவும் பலரும் உதவ வரவில்லை எனவும் நேற்றைய தினம் ரயிலில் ரயில்வே போலிசார் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லை என வருத்தம் தெரிவித்தார்.