மொழிப்போர் தியாகிக்கு அரங்கம் - அடிக்கல் நாட்டிய அமைச்சர்
அடிக்கல் நாட்டிய அமைச்சர்
இந்தி திணிப்பை எதிர்த்து முதன்முதலில் உயிர் தியாகம் செய்தவர் அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரை சேர்ந்தவர் சின்னசாமி. இந்நிலையில் மொழிப்போர் தியாகியான கீழப்பழூவூர் சின்னசாமிக்கு 3 கோடி மதிப்பீட்டில் திருவுறுவ சிலையுடன் அரங்கம் அமைக்கபடும் என தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்து இருந்தார்.
இதனையொட்டி கீழப்பழூவூரில் இன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தனர். இதில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சுருளிபிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story