மெய் கண்ணுடையாள் அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா!

மெய் கண்ணுடையாள் அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா!

பக்தர்கள் நேத்திக்கடன் 

விராலிமலை மெய் கண்ணுடையாள் அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.

விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மெய் கண்ணுடையாள் அம்மன் கோயிலில் ஆண்டதோ சித்திரை திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான விழாவையொட்டி கடந்த மாதம் 10 தேதி பூச்சொரிதல் விழா நடந்தது தொடர்ந்து 30 ஆம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேலைகளில் அம்மன் வீதி உலா நடந்து வந்தது.

தொடர்ந்து பக்தர்கள் மலர் குளம் கருப்பசாமி கோயில் சத்ரு சம்காரம் மூர்த்தி கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து மேல தாளத்துடன் முருகன் கோயிலில் மலையை சுற்றி வலம் வந்து மெய் கண்ணுடையாள் அம்மன் கோயிலில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூங்குழியில் இறங்கி பாலபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இன்று எட்டாம் தேதி காலை விராலிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு இட்டும் பொங்கல் வைத்து கிடாவெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மாலையில் படுக்களம் நாளை 9ஆம் தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது விலா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story