கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்தக் குட ஊர்வலம்

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்தக் குட ஊர்வலம்

ஊர்வலம் 

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது.

மேட்டூர் அருகே தொட்டில் பட்டியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக திருப்பணிகள் நிறைவடைந்து நாளை காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று தொட்டில் பட்டி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

அப்போது பம்பை ,மேள வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பசு,குதிரை, காளைகள் ஊர்வலத்துடன் அழைத்து வரப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், யஜமான சங்கல்பம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வி, முதற்காலயாகவேள்வி, பூர்ணாகுதி, தீபாரதனையும்,இரவு 10 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags

Next Story