தீர்த்தமலை தேரோட்டம் - கோட்டாட்சியர் முக்கிய அறிவிப்பு

தீர்த்தமலை தேரோட்டம் - கோட்டாட்சியர் முக்கிய அறிவிப்பு

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டத்திற்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தீர்த்தமலையில் அமைந்துள்ள அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் மார்ச் 1 இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி அரூர் ஆர்டிஓ வில்சன் ராசசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவண்ணாமலை, நரிப்பள்ளி கோட்டப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து திருத்தேரோட்ட நிகழ்விற்கு தீர்த்தமலை வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை RK ஏஜென்சீஸ் பெட்ரோல் நிலையம் எதிரில் அமைந்துள்ள ரங்கா நகர் என பெயரிடப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.

அதே போன்று அரூரிலிருந்து பாளையம், வீரப்பநாயக்கன்பட்டி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, எம். தாதம்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக அந்த நெடுஞ்சாலையில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை AKS பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள காலி இடத்தில் நிறுத்துதல் வேண்டும்.

அதே போன்று பொய்யப்பட்டி, சங்கிலிப்பட்டி, மாம்பட்டி மற்றும் அனுமன் தீர்த்தம் ஆகிய இடங்களில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சென்னம்மாள் FUELS பெட்ரோல் பங்க் எதிரில் அமைந்துள்ள இடத்தில் தங்கள் நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும், இன்று ஒருநாள் தீர்த்தமலை பஸ் நிலையம் தற்காலிகமாக மின்சார வாரிய அலுவலகத்தின் அருகே செயல்படும். மேலும் திருக்கோயிலின் உள்ளே தற்காலிக கடைகள் வைப்பதற்கு இந்த முறை அனுமதி வழங்கப்படவில்லை என அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story