இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் திருட்டு
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் காவலாளி வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கலையரங்கத்தில் இருந்த லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகிய வற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றி ஆய்க்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் வழக்க பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட தென்காசி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 35), அகரக்கட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவ ரின் மகன் அந்தோணி நிக்ஸன் ஜெயபால்(வயது 34) மற்றும் லூர்து என்பவ ரின் மகன் லூர்து அந்தோணி ராஜ் (வயது 30) என தெரிய வந்தது. இதனை அடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் பறிமுதல் செய்யப்பட்டது.