காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு
அம்மாபேட்டை காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து சாமி கழுத்தில் இருந்த நகை திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை ஒன்றியம் ராஜபுரம் கிராமத்தில் பாப்பார காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வழக்கம்போல் கோவில் பூசாரி ஐயப்பன் மாலை பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். காலையில் வாட்டர் டேங்க் ஆபரேட்டர் செல்வராஜ் கோவில் லைட்டை அணைக்க வந்த போது கோவிலின் வெளிப்புற கேட்டு மற்றும் உள்புற கேட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சாமி கழுத்தில் இருந்த சுமார் ஒரு கிராம் எடை கொண்ட 2 தங்க காசுகளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 5 ஆயிரம் ஆகும் இது குறித்து கிராம நாட்டாமை ராஜபுரம் முரளி (வயது 38) என்பவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story