பொன்னேரி பகுதியில் மூதாட்டியிடம் நூதன முறையில் திருட்டு
கோப்பு படம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் லோகம்மாள் (வயது 52) இவர் வாணியம்பாடி நடைபெறும் நிகழ்ச்சிக்காக தனது தாய் முனியம்மாள் (வயது 78) என்பவரை தனியாக வீட்டில் விட்டுவிட்டு சென்றிருந்தார் அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் லோகம்மாள் எங்கே என்று கேட்டுள்ளார்.
அவர்கள் வீட்டில் இல்லை என மூதாட்டி கூறியுள்ளார் அதன் பிறகு குடிக்க தண்ணீர் கேட்டு யுள்ளார் உனக்கு வயதாகியுள்ளதால் நானே உள்ளே சென்று சமையல் அறையில் தண்ணீர் குடித்து வருகிறேன் என கூறி வீட்டிற்குள் சென்ற பெண் மற்றொரு அறையில் பீரோவில் வைத்திருந்த மூன்றரை சவரன் தங்க நகை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது. தண்ணீர் குடித்துவிட்டேன் அப்புறமா வருகிறேன் என கூறி சென்றுள்ளார்.அதன் பிறகு லோகம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்து போது பீரோ திறந்து இருந்தது தெரியவந்தது இதனையெடுத்து மூதாட்டி உன்னை கேட்டு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்தார் என கூறினார்.
அதன் பிறகு பீரோவை பார்த்த போது பீரோவில் வைத்திருந்த மூன்றரை சவரன் தங்க நகை திருடி சென்றது தெரியவந்தது இதனையெடுத்து லோகம்மாள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் பேசி வீட்டிலிருந்த தங்க நகையை திருடி சென்ற பெண் குறித்து போலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.