நாட்றம்பள்ளி அருகே நூதன முறையில் திருட்டு!

நாட்றம்பள்ளி அருகே நூதன முறையில் திருட்டு!

கைதானவர்

நாட்றம்பள்ளி அருகே ஜி.பே. மூலம்நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஜீ.பே.மூலம் நூதனமுரையில் 20 ஆயிரம் திருட்டு! மர்மநபர்களை போலீஸ் தேடி வருகின்றனர்! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வாலூர் பகுதியியை சேர்ந்த தசரதன்வயது (35) இவர் வெலக்கல்நத்தம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் சேல்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை இருவர் பைக்கில் வந்து செல்போன் மூலம் பணம் 20 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்றும் கையில் பணம் தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய கடை உரிமையாளர் அவர் கொடுத்த செல்போன் நம்பருக்கு 20 ஆயிரம் போன் பே மூலம் அனுப்பி உள்ளார் பின்னர் அவரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டபோது ஏடிஎம் கார்டு மூலம் அருகே உள்ள ஏடிஎம்மில் எடுத்து வருவதாக கூறிவிட்டு அவருடன் வந்த நபரை கடை அருகில் உட்கார வைத்துவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து மர்ம நபருடன் வந்த நபரும் அங்கிருந்து நான் அவரை பார்த்து வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் கூச்சலிட்டு அங்கிருந்த தப்ப முயன்றவரை பிடித்து உட்கார வைத்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் (47) டைலர் வேலை செய்து வருவதாக கூறினார் மேலும் மதுபான கடையில் இருந்த என்னை ஒரு குவாட்டர் வாங்கி தருகிறேன் என்று கூறி அங்கிருந்து கூட்டி வந்ததாகவும் எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார். இந்நிலையில் கடை உரிமையாளர் உடனடியாக வங்கிக்கு சென்று மர்ம நபர் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து வங்கி கணக்கை பரிசோதித்துப் பார்த்தபோது வங்கி கணக்கிலிருந்து 20000 ரூபாயை மும்பை ஏடிஎம் கார்டை வைத்து பணம் எடுத்தது தெரிய வந்தது. நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட நபருடன் வந்தவரை பொதுமக்கள் நாட்றம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். த

ப்பியோடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நூதன முறையில் குவாட்டருக்கு ஆச பட்ட நபரை கூட்டி வந்து கடையில் அமர வைத்துவிட்டு பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story