தனியார் நிதி நிறுவனத்தில் திருட்டு

தனியார் நிதி நிறுவனத்தில்  திருட்டு
காவல் நிலையம் 
விருதுநகர் லட்சுமி காலனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் திருடப்பட்ட சமபவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் பெத்தனாச்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூரி .இவர் விருதுநகர் லட்சுமி காலனியில் பைனான்ஸ் நிறுவனமும் எல்ஐசி பிரிமியம் பாயிண்ட் என்ற பெயரில் கடை வைத்து தொழில் செய்து வருவதாகவும், இவர் கடந்த 31ஆம் தேதி இரவு வசூல் ஆன பணம் ரூபாய் 32,470ஐ அலுவலகத்தில் உள்ள டிராயர் வைத்து பூட்டிவிட்டு சென்றதாகவும், மறுநாள் காலை அருகே உள்ள டீக்கடைக்காரர் தனது அலுவலகம் கால்வாசி திறந்து கிடப்பதாக தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அங்கு வந்த கூரி அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு டிராயர் இருந்தால் 34 ஆயிரத்து 470 திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story