தர்மபுரி நகர பகுதி கடைகளில் திருட்டு - காவல்துறையினர் விசாரணை
காவல் நிலையம்
தர்மபுரி நகர பேருந்து நிலையம் அருகே, மாடியில் இயங்கி வரும் பெண்கள் அழகு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 9 பவுன் தங்க நகை மற்றும் 85 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இது குறித்து அழகு நிலையத்தின் உரிமையாளர் தர்மபுரி B1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார், அழகு நிலையத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். மேலும், கடையில் பாது காப்பிற் காக பொருத்தி உள்ள சிசிடிவி கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அதில் இரவு 11.42 மணிக்கு கடைக்குள் நுழைந்த 2 வாலிபர்கள், நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. அவர் கடைக்குள் நுழைந்து 45 நிமிடம் வரை இருந்து திருட்டில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது.
தொடர்ந்து தர்மபுரி ஆறுமுக ஆசாரி தெருவில் தனியார் வங்கி அருகே மாடியில் உள்ள கணினி சர்வீஸ் சென்டர், போட்டோ பிரேம் கடை உள்ளிட்ட 3 கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கடையில் 2 ஆயிரமும், அருகில் இருந்த கடையில் 3 ஆயிரமும் திருடியுள்ளனர். மற்றொரு கடையில் பணத்தை வைத்து செல்லாததால், கொள்ளையர்கள் ஏமாற் றுத்தடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் கடைகள் நிறைந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.