விராலிமலை : வீடுகளில் திருட்டு
திருட்டு
விராலிமலை அருண்கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வெளியே சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ வில் வைக்கப்பட்டிருந்த நான்கரை பவுன் நகை திருடு போ யிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் அங்குவந்து விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது சுப்பி ரமணியன் வீட்டிற்கு அடுத்து இருந்த சங்கரசுப்பு, சந்திரசேகர் ஆகியோரின் வீட்டு கதவுகளின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சங்கரசுப்பு வீட்டிலிருந்த 4 பவுன், ரூ. 3 ஆயிரம் ரொக்கம், சந்திரசேகர் வீட்டிலிருந்த 7 கிராம் தங்கம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.