வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருட்டு  

வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில்  திருட்டு  
பைல் படம்
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள நகை கடையில் வாடிக்கையாளர் போல வந்து தங்க நகைகளை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் சிசிடிவி பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள நகை கடைக்கு வாலிபர் ஒருவர் நகை வாங்க வந்தார். டிப்டாப் உடையில் வந்த நபர் செயின் வகைகளை எடுத்துக்காட்டுமாறு கூறினார். அதன் பேரில் நகைக்கடை ஊழியர்கள் செயின் வகைகளை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென அந்த வாலிபர் 8 கிராம் தங்க செயின்கள் 2, 6 கிராம் தங்கச் செயின் 1என மொத்தம் 22 கிராம் தங்க நகைகளை திருடிக் கொண்டு வெளியே ஓடினார்.

அப்போது அங்கு மற்றொரு வாலிபர் பைக்கில் தயார் நிலையில் இருந்தார். அந்த பைக்கில் ஏறி இருவரும் தப்பி சென்றனர். இது குறித்து நகைக்கடை உரிமையாளர் சத்யன் கோட்டாறு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வாகன சோதனை நடைபெற்றது. ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வாலிபர்கள் இருவரும் திருநெல்வேலி சாலையில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து நகைக்கடை உரிமையாளர் சத்யன் அளித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபர்களின் உருவம் சிக்கி உள்ளது. அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story