சிறு கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

சிறு கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

திருட்டு 

உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோயில் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகரில் மட்டுமல்லாது நகரினை சுற்றியுள்ள அனைத்து புறநகர் பகுதிகளிலும் பல்வேறு பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் மற்றும் பரிகார தளங்கள் அமைந்துள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்களில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுபினாயூர் ஊராட்சியில் அங்கன்வாடி தெரு அருகே பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் ஏகாம்பரஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைந்து அம்மன் மற்றும் பெருமாள் சிலைகளில் இருந்த 1/2 சவரன் தங்க நகை மற்றும் மூன்று வெள்ளி கீரிடத்தை திருடி சென்றனர்.

மேலும், கோவில் உண்டியலில் இருந்த சுமார் நான்கு ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story