ஆசிரியை வீட்டில் திருட்டு - குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

ஆசிரியை வீட்டில் திருட்டு - குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

நீதிமன்றம் 

அம்பாசமுத்திரத்தில் பள்ளி ஆசிரியை வீட்டில் தங்க, வெள்ளி நகைகளை திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியை பர்வீன்.இவரது வீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டில் மர்ம நபர்கள் புகுந்து 60 கிராம் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இந்த திருட்டில் ஈடுபட்ட சுடலைபழம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு நேற்று அம்பை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.இதனை விசாரித்த நீதிபதி பல்கலைச்செல்வன் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story