காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்ட லாரிகளில் திருட்டு
திருட்டு
மண் கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்டு காரிப்பட்டி காவல் நிலையம் முன் நிறுத்தப்பட லாரிகளில் டயர்கள், டீசல் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் சின்னகவுண்டாபுரம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து மண் கடத்திய 4 டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை காரிப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 2 லாரியில் இருந்த 5 டயர்கள் மற்றும் லாரியில் இருந்த டீசல் திருடப்பட்டது. இதை கண்டு லாரி உரிமையாளர்கள் பாலசுப்பிரமணி, அசோகன் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உரிமையாளர்கள் போலீசாரிடம் கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த திருட்டு குறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story