வீட்டில் திருட்டு - ஸ்பீக்கர் மாற்ற வந்தவர் கைவரிசை

வீட்டில் திருட்டு - ஸ்பீக்கர் மாற்ற வந்தவர் கைவரிசை

காவல் நிலையம் 

பெரியகுளத்தில் வீட்டில் ஸ்பீக்கர் மாட்ட வந்து பணத்தை திருடி சென்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் பொன்னாங்கு. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் ஸ்பீக்கர் மாற்றுவதற்காக முருகன் என்பவரை அழைத்துள்ளார். அவர் தான் வெளியூரில் இருப்பதாக கூறி வேறு ஒருவரை அனுப்பி வைத்த நிலையில் வீட்டிற்கு வந்த அவர் வயர் வாங்குவதாக கூறி வெளியே சென்றுள்ளார் அவர் சென்ற பின்பு பீரோவை பார்க்கையில் அதிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story