திருப்பத்தூர் அருகே நூதன திருட்டு - நகைகள் மாயம்
போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்மனா கோயில் பகுதியை சேர்ந்த ரஜினி இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார் இவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது தாயார் மற்றும்இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய வேலைகளை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை வைக்கோல் போரில் வைத்துவிட்டு சென்றுள்ளார்
மீண்டும் வீட்டிற்க்கு வந்து சாவி எடுத்து வீட்டின் கதவை திறந்து வீட்டிற்குள் செல்லும் பொழுது பீரோ திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்துள்ளார் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 300 கிராம் கால் கொலுசு மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் காணாமல் போய் உள்ளது கண்டு அழுது சத்தம் போட்டுள்ளார் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இது குறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும்பணம் கொள்ளை அடிக்கப்பட்டு மீண்டும் வீட்டை பூட்டி அதே இடத்தில் வைத்து சென்றுள்ளனர் அதே பகுதியை சேர்ந்தவர்களா அல்லது வெளி ஆட்க்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் குறித்து அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.