மேலூரில் 300 குழாய்கள் திருட்டு: 5ஊழியர்கள் கைது
குழாய்களை திருடிய ஊழியர்கள்
மேலூரில் காவிரி கூட்டு குடிநீர் அமைக்க வைத்திருந்த 300 குழாய்களை திருடிய 5ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சொக்கம்பட்டி பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களான யோகேஸ்வரன், சிவா, ரஞ்சித், சங்கர்தாஸ், சரவணன் மற்றும் கிரேன் ஆப்ரேட்டர் சக்தியுடன் அங்கு 13.5 கிலோமீட்டர் தொலைவவிற்கு பதிக்க வைத்திருந்த சுமார் 40 இலட்சம் மதிப்பிலான 300 குழாய்களை கிரேன் உதவியுடன் ஈச்சர் வேனில் திருடி சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக, தனியார் நிறுவனத்தின் அதிகாரி அழகப்பன் அளித்த புகாரில் பேரில், கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
Tags
Next Story