படகு எஞ்சின்கள் திருட்டு

படகு எஞ்சின்கள் திருட்டு

படகு எஞ்சின் கள் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் இரண்டு படகுகளின் எஞ்சின்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம், பெரியகுளம் ஏழாவது அன்பியம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி முத்து மகன் பெலிங்டன் நாயகன் (29) இவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத வள்ளத்திலும், இவரது நண்பர் பெரியவளை வின்சென்ட் என்பவர் சொந்தமான பதிவு செய்யப்பட்ட வள்ளத்திலும் தனித்தனியே பெரியவிளை கடற்கரையிலிருந்து 24 ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடித்து விட்டு பகல் 12 மணி அளவில் பெரியவிளை கடற்கரையில் கடலில் வள்ளங்களை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் ஜனவரி 25ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் மீன்பிடி தொழிலுக்கு செல்ல கடற்கரை பகுதிக்கு சென்றபோது இரண்டு வளங்களில் இருந்த இன்ஜின்களை காணவில்லை. அவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.இருவரும் அந்த பகுதிகளில் தேடி இஞ்ஜின் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பெலிங்டன் குளச்சல் மரைன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருட்டுப் போன இன்ஜின்களின் மதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரம் என்று தெரிய வருகிறது. இது தொடர்பாக குளச்சல் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story