பெண்ணிடம் நூதனமான முறையில் தங்க நகைகள் திருட்டு

பெண்ணிடம் நூதனமான முறையில் தங்க நகைகள் திருட்டு

நரிப்பள்ளியில் வீட்டிலிருந்து பெண்ணிடம் பூஜை செய்வதாக கூறி தங்க நகைகளை திருடிய மரம் நபர்கள் மீது காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


நரிப்பள்ளியில் வீட்டிலிருந்து பெண்ணிடம் பூஜை செய்வதாக கூறி தங்க நகைகளை திருடிய மரம் நபர்கள் மீது காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வந்த கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் உங்கள் வீட்டில் பிரச்சினை உள்ளது. அதை தீர்க்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அது பற்றி கேட்ட போது நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மாந்திரீகம் செய்து கொடுத்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி ராஜேஸ்வரி, ஒரு பவுன் நகையை கோபியிடம் கொடுத்துள்ளார். பூஜை செய்து ஒரு வாரம் கழித்து அந்த பொருட்களை கொடுப்பதாக கூறிய கோபி தனது செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு சென்றார்.

ஒரு வாரம் கழித்து கோபிக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தராஜேஸ்வரி இதுகுறித்து கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கோட்டப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான கோபியை வலைவீசி தேடி வருகிறார்கள். பெண்ணிடம் தங்க நகைகளை நூதனமான முறையில் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story