திருமண வீட்டில் நகைகள் திருட்டு
குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் பெல்பின். இவருக்கு இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன் இறந்த நிலையில், இவரது மூத்த மகளுக்கு நேற்று காலையில் 10:00 மணியளவில் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அனைவரும் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றனர். மணப்பெண் திருமண உடை அணிந்திருந்ததால் ஒரு நகை மட்டுமே கழுத்தில் அணிந்து இருந்தார். இதை கவனித்த திருடன் மற்ற நகைகள் அனைத்தும் வீட்டில் இருக்கும் என்ற நோக்கத்தில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 22 கிராம் எடை உள்ள தங்க நகைகளை திருடி உள்ளனர்.
மேலும் மணப்பெண்ணுக்கு மணமகன் வெளிநாட்டில் இருந்து வரும் போது ஆசையாக பரிசளித்த ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புடைய புதிய ஐபோனும் திருட்டு போயிருந்தது. மணப்பெண்ணின் நகைகள் ஆலயத்திற்கு செல்லும் போது கையில் வைத்திருந்ததால் இந்த நகைகள் எல்லாம் தப்பின. இது தொடர்பாக அருமனை போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமண வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் நூதன முறையில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.