பைக் கவரில் வைத்திருந்த பணம் திருட்டு - போலீசார் விசாரணை
திருட்டு
தூத்துக்குடியில் பைக் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.12,500 பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி டிஎம்பி காலனி 7வது தெருவைச் சேர்ந்தவர் மாடாசாமி மகன் பொன்ராஜ் (58). இவர் நேற்று தனது வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்துள்ளார். அப்போது பைக் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.12,500 பணம் திருடு போய்விட்டது. இதுகுறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்சி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story