உணவகத்தில் ரூபாய் 20 திருட்டு!

உணவகத்தில் ரூபாய் 20 திருட்டு!

திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள உணவகத்தில் இரவு ரூ. 20 ஆயிரத்தை திருடி சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை- விராலிமலை சாலை கடை வீதியில் காவல் நிலையம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் இரவு கதவின் பூட்டை உடைத்துகடையினுள் இருந்த ரூ. 20 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றார். 2022-இல் இதே உணவகத்தில் பூட்டை உடைத்து ரூ. 65 ஆயிரம் திருடப்பட்ட வழக்கில் இதுவரையில் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, தற்போதைய சம்பவத்தில் ஈடுபட்ட நபர், 2022-இல் நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்போல் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.இதனிடையே, இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags

Next Story