பெட்டிக்கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருட்டு

பெட்டிக்கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருட்டு

திருட்டு நடந்த பெட்டிக்கடை 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் தங்கரத்தினம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வீடு கட்டுவதற்காக 60 ஆயிரம் ரூபாய் பைனான்ஸ் வாங்கியதாக தெரிகிறது நேற்று இரவு பெட்டிக்கடையில் பணத்தை வைத்து விட்டு வீடு திரும்பியதாக தெரிகிறது, இதைக் நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் இரவில் கொள்ளை அடித்து சென்றனர். வழக்கம்போல் காலையில் வந்து கடையை திறக்கும் போது கடையின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தங்கரத்தினம் திருவேங்கடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் .புகாரின் பேரில் திருவேங்கடம் உதவி ஆய்வாளர் தாமரலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story