தேர்தல் அறிக்கையில் தங்களது கோரிக்கை - முடிதிருத்தும் தொழிலாளர்கள்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் தங்கள் கோரிக்கையான மருத்துவ சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு வேண்டும் முடிவெட்டும் தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு இயற்றிட வேண்டும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் ஒரு மருத்துவர் உறுப்பினர் வேண்டும், மருத்துவர் சமுதாயத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை தர வேண்டும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச கருவிகள் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என சங்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, கோரிக்கை மனுவை பாலக்கரையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனிடமும், பெரம்பலூர் சாலையில் உள்ள ரங்கா நகர் பகுதியில் அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வனிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் முத்தமிழ் செல்வன் உன்னிட்ட பல்வேறு கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம் 2024பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில் தங்களது கோரிக்கை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, மனுவை அளித்தனர், சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் மனு கொடுத்த நிகழ்சியில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.