பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக என் மண் என் தேசம்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக என் மண் என் தேசம்

பா.ஜ.க 

தேனி பா.ஜ.க சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சிக்காக சுதந்திரபோராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து மண் சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள "என் மண் என் தேசம்" நிகழ்விற்காக தேனி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறை, வைகை ஆறு, கம்பம் ,போடி ,ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் போராட்ட தியாகிகள் வாழ்ந்த இடங்களில் இருந்து 8 மண் கலசங்களில் மண் சேகரித்து அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மண் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாட்டுக்குத் தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்படவுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடு மாவட்ட இளைஞரணி தலைவர் அஜித் இளங்கோ செய்திருந்தார் மேலும் இந்த நிகழ்வில் வர்த்தக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி தொழில்நுட்ப பிரிவு தலைவர் மணி வழக்கறிஞர் பிரிவு தலைவர் கோபி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story