தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பலத்த வரவேற்பு

தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பலத்த வரவேற்பு

  விக்கிரமங்கலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பொதுமக்கல் பலத்த வரவேற்பு அளித்தனர்.  

விக்கிரமங்கலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பொதுமக்கல் பலத்த வரவேற்பு அளித்தனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் உசிலம்பட்டி தொகுதி செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பிரச்சாரத்திற்காக விக்கிரமங்கலத்திற்கு வருகை தந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு சுமார் 2000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர் .

பின்னர் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கிய தளபதியின் கருத்தை வலுப்படுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் தமிழக முதல்வர் மூலம் நிறைவேற்றப்படும் என்று பேசினார்.

கூட்டத்தில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் துணைச் செயலாளர் சிவனாண்டி, செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

Tags

Next Story